உளநலம

Mental Helse

உளநலம்பற்றிய இலகுவான கேள்விகள், சிந்தனைகள் பலருக்கும் நன்மைபயக்கூடிய விடயமாகும்

Mental Helse நிறுவனத்தின் ஆலோசனைகள் – #spørmer

உளநல விடயத்தில் சவால்களைச் சந்திக்கும் உங்களின் நண்பர்
ஒருவருடன் தொலைபேசுமாறு, குறுஞ்செய்தி ஊடாக நலம்
விசாரிக்குமாறு அல்லது வேறு ஏதாவது ஒரு முறையில்
தொடர்புகொண்டு ஆதரவு காண்பிக்குமாறு
கேட்டுக்கொள்கிறதுடன் உளநலத்தில் சவால்களை சந்திக்கும்
ஏனையோருக்கும் ஆதரவு காண்பிக்குமாறும் Mental Helse நிறுவனம்
கேட்டுக்கொள்கிறது. நீங்கள் சமூக ஊடகங்களையும் இதற்கு
உபயோகிக்கலாம்.

துரதிஸ்டவசமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு ஏற்ற உளநல சுகாதார உதவிகள் கிடைக்கும் வசதிகள் குறைவாக உள்ளன. இதன் காரணமாக உதவி தேவைப்படும் எம்மவர்களுடன் அவசியத் தேவைகள்பற்றி உரையாடுவது, உதவுவது, அவர்களுக்கு தேவையான துறைசார் தேர்ச்சிபெற்ற உதவிகளைப் பெறுவதற்குரிய வழிகாட்டும்
செயற்பாடுகளைச் செய்வது அவசியமாகிறது.

நீங்கள் உளநல விடயமாக சவால்களை சந்திப்பவராக இருப்பின் உங்களுக்கு உதவ உங்களது சுற்றாடலில் பலரும், தன்னார்வல உதவிக்குழுக்களும் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக உதவும் குழுக்கள் உரையாடுவதற்கு, வெளியே செல்ல அல்லது உங்களது தேவைகளை பூர்த்திசெய்யக் காத்திருக்கின்றன.

 • ஒரு மனிதனின் உளநலத்திற்கு சக மனிதர்களின் அன்பும் ஆதரவும்
 • அரவணைப்பும் மிக அவசியம். நாம் சந்திக்கும் மனிதர்கள் உரையாட
 • விரும்பும்போது அவற்றிற்கு காதுகொடுப்பதும், ஆதரவு
 • வழங்குவதும், அவர்களுக்கு ஆதரவாக இருப்பதும் அவர்களது
  உளநலத்தினை வளப்படுத்த உதவும்.

உளவளம்பற்றி நாம் வெளிப்படையகப் பேசும்போது:

 • அதுபற்றி இலகுவாக எமது மனக்கிடக்கைகளை, எண்ணங்களைப்
  பகிரலாம்.
 • பேசாப்பொருளாக உள்ள உளவளக் கருத்துக்கள் குறையலாம்.
 • உளவளம்பற்றிய சிந்தனை மேம்படும்.
 • எமது சுற்றாடலில் உள்ளவர்களுக்கு கரிசனம் காண்பிக்கும் எண்ணம்
  ஏற்படும்.
 • சக மனிதர்கள் மீது கரிசனமுள்ள சமூகம் உருவாகும்.

Mental Helse நிறுவனம் பல சமூகங்களைச் சேர்ந்த மற்றும் வெவ்வேறு
கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைக்கும் பல நடவடிக்கைகளையும், உளவளம்பற்றிய உரையாடல்களையும்

அவசியமேற்படும் பொழுதுகளில் ஒழுங்குசெய்கிறது.
உங்களுக்கு உளவளம்பற்றி உரையாடவேண்டும் எனத் தோன்றுமிடத்து நோர்வேஜிய மற்றும் ஆங்கில மொழியில் எமது வளவாளர்களுடன் 116� 123 என்னும் இலத்திற்கு அழைப்பது மூலம் உரையாடலாம்.

அவசியமேற்படும் பொழுதுகளில் எமது வளவாளர்களுடன் நீங்கள் Chat
மூலமாக உரையாடலாம்

.எமது இணையத்தளத்தில் மேலதிகவிபரங்களைக் காணலாம் hjemmesider.
உளவளம்பற்றி அரசாங்கத்தின் மேலதிகத் தகவல்கள்